close
Choose your channels

விவசாயி முதல் முதல்வர் வரை… எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை குறித்த வைரல் வீடியோ!

Saturday, March 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழக முதல்வராக அதிமுக கட்சியின் அனைத்துத் தொண்டர்களாலும் தேர்ந்தெடுக்கப் பட்டவர் எடப்பாடி பழனிசாமி. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தன்னுடைய பணியை மிகச் சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார். தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்நிலையில் அவர் கடந்து வந்த பாதை குறித்தும் பின்னணி குறித்த தகவல்களும் சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று இருக்கின்றன.

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம், சிலுவம்பாளையம் எனும் சிற்றூரில் கருப்பக் கவுண்டர்-தவசியம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர்தான் பழனிசாமி. இவருக்கு ராதா என்பவருடன் திருமணம் ஆகி மிதுன் குமார் என்ற மகனும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி தன்னடைய பள்ளிப் படிப்பை எடப்பாடி பகுதியில் முடித்த பின்பு ஈரோடு வாசவி கல்லூரியில் இளங்கலை விலங்கியல் படித்து உள்ளார். பின்னர் எடப்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் தயாரிக்கப்படும் வெல்லத்தை வாங்கி ஈரோடு மண்டியில் விற்பனை செய்யும் ஒரு வியாபாரியாக பழனிசாமி பணியாற்றிக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில்தான் (1974) தற்போது அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் பழனிசாமியை கோனேரிப்பட்டி கிளைச்செயலாளராக அறிவித்து அரசியல் வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இப்படி ஆரம்பித்த இவரது அரசியல் வாழ்வு, 1990-இல் சேலம் வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர், 1991-இல் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர், 1993-இல் சேலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர், 2001-இல் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் தலைவர், 2006-இல் கழக கொள்கை பரப்பு செயலாளர், 2011-இல் நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்,  2014-இல் கழக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் மற்றும் தலைமை செயலாளர், அடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் எனப் பல்வேறு படிநிலைகளுக்கு இழுத்துச் சென்று இருக்கிறது. இத்தனை உயரத்துக்கும் இவரது அயராத உழைப்பும் அரசியல் மீதான பற்றும் காரணமாக இருந்து இருக்கிறது.

இதற்கு இடையில் பல்வேறு சறுக்கல்களும் நடந்து இருக்கின்றன. முதலில் 1989-இல் அதிமுக சார்பாக எடப்பாடி சேவல் சின்னத்தில் போட்டி வெற்றி பெற்று இருக்கிறார். ஆனால் 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் எடப்பாடி தொகுதியில் எம்எல்ஏவாக நின்ற இவர் படு தோல்வியை சந்தித்து இருக்கிறார். அடுத்து 2016 ஆம் ஆண்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்று நெடுஞ்சாலைகள் மிற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் உயர்ந்து உள்ளார்.

மேலும் கடந்த 1998 ஆம் அண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது திருச்செங்கோடு தொகுதியில் போட்டிப்போட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திலும் கால் பதித்து இருந்தார். பின்னர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிக்கு பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

இப்படி முதல்வர் பதவிக்கு உயர்ந்த எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சில பாராட்டுகளையும் சில விமர்சனங்களையும் சந்தித்தே அதை கடந்து வந்து உள்ளார். அவருடைய வெற்றிப் பக்கத்தில் காவேரி டெல்டா பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது, நகைக்கடன் பயிர்க்கடன் தள்ளுபடி, அதிக முதலீடு ஈர்ப்பு, அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவேற்றம், நீட் தேர்வில் 7.5% உள்இடஒதுக்கீடு வழங்கியது போன்றவை பாராட்டைப் பெற்றன.

அதேநேரத்தில் துத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் முறைகேடு, கதிராமங்கலம் போராட்டக் காரர்களிடம் நடந்து கொண்ட முறை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் போன்றவற்றில் பல விமர்சனங்களிலும் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விவசாயி-முதல்வர் என்று தொடர்ந்து தன்னுடைய வெற்றிப்பாதையில் உலா வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.