கொரோனா வைரஸால் பாதித்த ரசிகர்: சிம்பு செய்த நெகிழ்ச்சியான செயல்!

  • IndiaGlitz, [Saturday,May 09 2020]

நடிகர் சிம்பு தனது ரசிகர்கள் மீது மிகுந்த பற்றும் பாசமும் உள்ளவர் என்றும் அவ்வப்போது ரசிகர்கள் இல்லை என்றால் நான் இல்லை என்று பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சிம்புவின் கடலூர் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகி சிம்பு ஆனந்தன் என்பவர் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து தகவலறிந்த சிம்பு, உடனே சிம்பு ஆனந்தனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அவர் விரைவில் நலமுடன் குணமாகி வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் தனது ரசிகர்களுக்கு அவர் கூறுகையில் ’இந்த சோதனையான கட்டத்தில் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் தன்னம்பிக்கையுடன் சோதனைகளை எதிர் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது ரசிகரிடம் சிம்புவை நேரடியாக போன் செய்து ஆறுதலுடன் பேசியதோடு, விரைவில் குணமடைய வாழ்த்து கூறியது சிம்பு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

கொரோனா பயங்கரம்: கண்டுபிடிக்கப்படாத சமூகப் பரவல் அதிகரிக்கும்!!! WHO எச்சரிக்கை!!!

கொரோனா பாதிப்பு மேற்கத்திய நாடுகளில் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் தற்போது ஆப்பிரிக்கா நாடுகளையும் தாக்க ஆரம்பிவித்து விட்டது.

இதுகூட புரியாமல் வசைபாடுகிறீர்களே? விஜய்சேதுபதி விவகாரம் குறித்து பிரபல இயக்குனர்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது கடவுள் குளிப்பதை காட்டுகிறார்கள்,

அமித்ஷா உடல்நிலைக்கு என்ன ஆச்சு? அவரே அளித்த விளக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அவர் குறித்த செய்திகள் எதுவும் ஊடகங்களில் வெளிவரவில்லை.

ஒரு ரூபாய் சம்பளம் போதும், ஆனால் ஒரு கண்டிஷன்: பிக்பாஸ் நடிகையின் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் காமெடி நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான நடிகை ஆர்த்தி தனக்கு ஒரு வருடத்திற்கு இனி ஒரு ரூபாய் சம்பளம் போதும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

டீக்கடைகள், காய்கறி கடைகள் திறக்கலாம்: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

தமிழகத்தில் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் ஒருசில தளர்வுகள் குறித்த அறிவிப்பை அவ்வப்போது தமிழக அரசு அறிவித்து வருகிறது.