ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு கொடுத்த சிம்பு

  • IndiaGlitz, [Sunday,July 16 2017]

சமீபத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இங்கிலாந்தில் 'நேற்று இன்று நாளை' என்ற இசை நிகழ்ச்சியை நடத்தியபோது தமிழில் மட்டுமே அதிக பாடல்கள் பாடியதாக கூறி வட இந்தியர்கள் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும்போதே வெளியேறியதாக சர்ச்சை எழுந்தது.
இந்த சம்பவம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி, நடிகை குஷ்பு, பாடகி சின்மயி உள்பட பலர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இசை என்பது மொழி எல்லையை தாண்டியது. ரஹ்மான் நமது தேசத்தின் பெருமை. மொழி என்ற வேலியை எடுத்து வரவேண்டாம். அப்படிப்பட்ட எல்லையிலிருந்து விலகியே எந்தக் கலை வடிவமும் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்
இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 'இசைக்கு மொழி என்பதே கிடையாது. எனவே தான் இசை அனைத்து தரப்பு மக்களையும் இணைக்கின்றது. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ஜீனியஸ். இந்த பிரச்சனைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கவும் என்று கூறியுள்ளார்.

More News

அபிராமி ராமநாதனுக்கு விஷால் நன்றி கடிதம்

அபிராமி திரையரங்க உரிமையாளரும், தமிழக திரையங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான அபிராமி ராமநாதன் நேற்று தனது திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்தால் அதற்கு தனியாக கட்டணம் இல்லை என்று அறிவித்தார்.

வேஷ்டி அணிந்தால் அனுமதி கிடையாதா? வணிக வளாக நிர்வாகிகளிடம் பிரபல இயக்குனர் ஆவேசம்

கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்றுக்கு பிரபல திரைப்பட இயக்குனர் அசிஷ் அவிகுந்தக் நேற்று நடிகை தேவலீனா சென் அவர்களுடன் சென்றிந்தார்.

கன்னட சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கும் வெற்றிமாறன்

கோலிவுட் திரையுலகில் மூன்றே படங்களை இயக்கியிருந்தாலும் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர் இயக்குன வெற்றிமாறன். 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' மற்றும் 'விசாரணை' ஆகிய வெற்றி படங்களை அடுத்து வெற்றிமாறன் தற்போது தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' படத்தின் முதல் பாகத்தை இயக்கி வருகிறார்...

திரையுலகை சரி செய்யுங்கள், அரசியலை பின்பு பார்க்கலாம்: கமல்ஹாசனுக்கு தமிழிசை

கடந்த சிலநாட்களாகவே மீடியாக்களின் தலைப்பு செய்தியில் உலகநாயகன் கமல்ஹாசன் தான் இடம்பெற்று வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சை, தமிழக அரசு மீது அவர் வைக்கும் விமர்சனம், அமைச்சர்களின் பதிலடி, மு.க.ஸ்டாலினின் ஆதரவு, ஸ்டாலினுக்கு கமல் நன்றி என மீடியாக்களுக்கு பஞ்சமில்லாமல் பிரேக்கிங் நியூஸ்களை கமல் கொடுத்து வருகிறார்...

ஏ.ஆர்.ரஹ்மானின் தாய்மொழி இதுதான். தனுஷ் விளக்கம்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் லண்டனில் நடத்திய 'நேற்று இன்று நாளை' என்ற இசை நிகழ்ச்சியில் இந்தி பாடல்களை அவர் பாடவில்லை என்று குற்றம் சாட்டி நிகழ்ச்சியின் பாதியிலேயே வட இந்திய ரசிகர்கள் எழுந்து போனதாக செய்திகள் வெளிவந்தன...