சுபஸ்ரீ மரணம்: பேனர் வைத்தவருக்கு நெஞ்சுவலி, மருத்துவமனையில் அனுமதி

  • IndiaGlitz, [Saturday,September 14 2019]

நேற்று முன் தினம் அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்லத்திருமண விழாவிற்காக சாலையில் வைக்கப்பட்ட பேனர் திடீரென கீழே விழுந்ததால் எதிர்பாராதவிதமாக பலியானவர் சுபஸ்ரீ என்ற இளம்பெண். இதுகுறித்து நீதிமன்றம் சாட்டையை சுழட்டி மாநகாராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, தமிழக அரசுக்கும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது

இதனையடுத்து போஸ்டர் அச்சடித்த அச்சகத்தை சீல் வைத்தும், லாரி டிரைவரையும் மட்டும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து போஸ்டர் அடித்த முன்னாள் கவுன்சிலர் மீது இ.பி.கோ.304(ஏ)- கவனக் குறைவால் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More News

நானும் அப்பாவும் இணைந்து கொடுக்கும் சர்ப்ரைஸ்: யுவன்ஷங்கர் ராஜா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆன பின்னரும்,

'தளபதி 64' நாயகியின் வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 64' திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டது.

பிரபல இயக்குனரின் உதவியாளரை மணந்த 'கோமாளி' படத்தொகுப்பாளர்

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'கோமாளி' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இது சினிமாவுக்கும் பொருந்தும்: 'பேனர்' மரணம் குறித்து பிரபல நடிகர் 

அரசியல் கட்சி ஒன்றின் பேனர் சாலையில் விழுந்ததன் காரணமாக சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியானவுடன் ஒருசில அரசியல்கட்சிகளும், அரசியல்வாதிகளும் திடீரென ஞானோதயம் பெற்று

ஜெயம் ரவியின் அடுத்த படம் 'பேபி' ரீமேக்கா? இயக்குனர் விளக்கம்

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜனகணமன' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்