சசிகலா மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் அவர்தான் முதல்வர். சு.சுவாமி

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

பாஜக முத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சற்றுமுன்னர் பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் சசிகலா முதல்வர் பதவியேற்பது குறித்து கூறும்போது, 'சசிகலா மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. நான் தான் அவர் மீது ஊழல் வழக்கை போட்டேன். அந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வரவுள்ளது. இருந்தாலும் சட்டப்படி அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்' என்று கூறினார்.

மேலும் கவர்னர் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நிச்சயம் சென்னையில் இருந்திருக்க வேண்டும். அவர் சென்னையில் இல்லாததை கடுமையாக கண்டிக்கின்றேன். அதிமுக எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு நிச்சயம் முதல்வர் பதவிப்பிரமாணம் செய்து வைத்து சட்டப்படி கவர்னர் நடந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

More News

நல்லது நடக்கும். தர்மம் நிச்சயம் வெல்லும். கவர்னரை சந்தித்த பின் ஓபிஎஸ் பேட்டி

தமிழக முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் சற்று முன்னர் தமிழக கவர்னரை சந்தித்துவிட்டு தனது இல்லத்தில் திரும்பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்...

மு.க.ஸ்டாலினைவிட அவரது மனைவி நல்லவர். சுப்பிரமணியன் சுவாமி

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி இன்று பிபிசி ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டி ஃபேஸ்புக் லைவ் மூலம் சற்று முன்னர் ஒளிபரப்பப்பட்டது...

டெல்லியில் மோடி-தம்பிதுரை சந்திப்பு. என்ன பேசினார்கள்?

தமிழக கவர்னரை இன்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ள நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பிரதமர் மோடி அவர்களை சந்தித்துள்ளார்....

ஆளுனர் மாளிகையில் ஓபிஎஸ். ராஜினாமா குறித்து விளக்கம் அளிப்பார் என தகவல்

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ் சற்று முன்னர் மும்பையில் இருந்து சென்னை வந்தடைந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு கவர்னரை சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டிருந்தது...

ஈசிஆர் ரிசார்ட்டில் நடப்பது என்ன?

ஒருபக்கம் அடுத்த முதல்வர் யார் என்ற ரேஸில் முந்தப்போவது ஓபிஎஸ் அவர்களா? சசிகலா அவர்களா? என்ற பரபரப்பில் தமிழகமே இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் முதல்வரை தேர்வு செய்ய வேண்டிய அதிமுக எம்.எல்.ஏக்கள் எங்கு, எப்படி உள்ளார்கள் என்பது குறித்து வெளிவந்த தகவல்களை பார்ப்போம்...