close
Choose your channels

சுதா கொங்கராவின் அடுத்த படத்தின் நாயகன் சூர்யாவா? சிம்புவா?

Friday, April 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது .

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் நாயகன் சிம்புவாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பை சுதா கொங்கரா விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

கேஜிஎப் 2 தயாரிப்பாளருடன் சுதா கொங்காரா இணைந்துள்ள இந்த படத்தில் சிம்பு இணைவது உறுதி செய்யப்பட்டால் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சூர்யா நடித்து தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் அதே நேரத்தில் சூர்யா தற்போது பாலாவின் திரைப்படத்தில் பிஸியாக உள்ளார். இதனை அடுத்து வெற்றிமாறனின் ’வாடிவாசல்’ சிறுத்தை சிவா இயக்கும் படம் என வரிசையாக இருப்பதால் அந்த படங்களை முடித்துவிட்டு சுதா கொங்கராவுடன் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment