நடிகர் மாதவனுக்கு விருந்து வைத்த சுதா கொங்கரா.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,April 14 2023]

நடிகர் மாதவனுக்கு இயக்குனர் சுதா கொங்கரா விருந்து வைத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’இறுதிச்சுற்று’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் மூலம் பிரபல இயக்குனர் சுதா கொங்கரா மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’இறுதிச்சுற்று’ படத்திற்கு முன்பே மாதவன் மற்றும் சுதா கொங்கரா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ஆய்த எழுத்து’ என்ற படத்தில் மாதவன் நடித்திருந்த நிலையில் அந்த படத்தில் சுதா கொங்கரா உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீண்ட நாள் நண்பர் மாதவனுக்கு சுதா கொங்கரா தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார். இந்த விருந்தில் மாதவன் கலந்து கொண்டதாக கூறி சுதா கொங்கரா வங்கை அன்னம், பொடி சாம்பார், வத்த குழம்பு, தயிர் சாதம் உள்ளிட்ட உணவு வகைகளை மாதவனுக்கு தான் பரிமாறியதாக தெரிவித்துள்ளார்.

இந்த விருந்துக்கு நன்றி கூறிய நடிகர் மாதவன் ’நீங்கள் ஒரு அசாதாரண இயக்குனர் மட்டுமின்றி அசாதாரணமான சமைத்து விருந்தளிப்பவர் என்பதையும் புரிந்து கொண்டேன். உங்கள் கைகளால் உங்கள் அழகான இல்லத்தில் எனக்கு நீங்கள் பரிமாறுவது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி சுதா கொங்கரா’ என்று தெரிவித்துள்ளார்.

More News

என்ன ஆச்சு ரோபோ சங்கருக்கு? மகள் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில நாட்களாக உடல் மெலிந்து காணப்படுவதாக செய்திகள் வெளியானது என்பதும் அது குறித்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து

சென்னை-ராஜஸ்தான் போட்டி குறித்து சர்ச்சை கருத்து: அஸ்வினுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ..!

சமீபத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் நடுவர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்

நீயும் ஒரு நாள் விமானத்தில் போகலாம்.. சமுத்திரக்கனி, மீரா ஜாஸ்மின்  'விமானம்' புரமோ வீடியோ..!

சமுத்திரகனியுடன் நடிகை மீரா ஜாஸ்மின் நடித்த 'விமானம்' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கலந்து சில வாரங்களாக நடைபெற்று வருகிறது

என் மாமியாருக்கு அவர் தான் ஹீரோ.. குஷ்பு சொன்னது யாரை தெரியுமா?

எனது 88 வயது மாமியாருக்கு தல தோனி தான் ஹீரோ என்று நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

'சூர்யா 42' படத்திற்கு ரஜினி பட டைட்டிலா? சிறுத்தை சிவாவின் மாஸ் திட்டம்..!

சூர்யா நடித்து வரும் 'சூர்யா 42' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் வரலாற்று கதை அம்சம் கொண்ட காட்சிகளின் படப்பிடிப்பை கேரளா, இலங்கை ஆகிய