தனுஷின் 2வது படத்தில் விஜய் பட வில்லன்?

  • IndiaGlitz, [Wednesday,February 14 2018]

விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தில் வில்லனாக நடித்த கிச்சா சுதீப், தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தனுஷ் இயக்கிய முதல் படமான 'ப.பாண்டி' நல்ல வெற்றியை பெற்ற நிலையில் விரைவில் அவர் இன்னுமொரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை விஜய்யின் 'மெர்சல்' படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க தனுஷ், சுதீப்பை கேட்டுக்கொண்டதாகவும், தன்னுடைய கேரக்டர் குறித்து தனுஷிடம் கேட்டறிந்த சுதீப் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தனுஷ் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா', வடசென்னை மற்றும் 'மாரி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே பாட்டில் முன்னேற இது சினிமா அல்ல: கமல், ரஜினிக்கு பிரபல நடிகர் அறிவுரை

அரசியலில் அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக முன்னேற வேண்டும் என்றும், பதவிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்து உடனே முதல்வராக, இது ஒன்றும் ஒரே பாட்டில் முன்னேறும் சினிமா அல்ல

அதிமுகவில் இருந்து திடீரென விலகிய பிரபல பாடகி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து அரசியல் பிரபலங்களும், திரையுலகை சேர்ந்த பலரும் விலகி வருவதை பார்த்து வருகிறோம்,.

புருவ நடன அழகி பிரியா மீது போலீசில் புகார்

கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் பிரியா வாரியர். 'தி ஆடார் லவ்' என்ற படத்தின் டிசரில் இவர் தன்னுடைய புருவத்தால் ஆடிய நடன அசைவும், கண்சிமிட்டும்

'மாரி 2' படத்தில் வரலட்சுமியின் 'மாஸ்' கேரக்டர்

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவுள்ளதாக பார்த்தோம்.

தல அஜித் முதன்முதலாக எடுக்கும் புதிய முயற்சி

இயக்குனர் சிவா இயக்கத்தில் மீண்டும் தல அஜித் நடிக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.