தந்தை குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவரின் பிளஸ் 2 மதிப்பெண்கள்

  • IndiaGlitz, [Thursday,May 17 2018]

தந்தை குடிப்பழக்கத்தால் இம்மாதம் 2ஆம் தேதி நெல்லையில் தற்கொலை செய்து கொண்ட மாணவர், பிளஸ் 2 வகுப்புத் தேர்வில் 1024 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

நெல்லையை சேர்ந்த தினேஷ் என்ற மாணவர் தந்தை குடிப்பழக்கத்தால் மனமுடைந்து பாலம் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை பரபரப்பு ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று. இவர் தற்கொலைக்கு முன் தான் எழுதி வைத்த கடிதத்தில் தமிழக அரசு தனது மரணத்திற்கு பின்னராவது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதில் இந்த தினேஷ் என்ற மாணவர் 1200க்கு 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர் எடுத்த மதிப்பெண்களின் விபரம் பின்வருமாறு:

தமிழ் - 194
ஆங்கிலம் - 148
இயற்பியல் - 186
வேதியியல் - 173
உயிரியல் - 129
கணிதம் - 194
மொத்தம் - 1024

தினேஷின் இந்த மதிப்பெண்களை பார்த்து அவரை படிக்க வைத்த சித்தப்பா உள்பட குடும்பத்தினர் கண்கலங்கியுள்ளனர். வருங்காலத்தில் ஒரு டாக்டர், எஞ்சினியர் ஆகியிருக்க வேண்டிய ஒரு மாணவர், தந்தையின் குடிப்பழக்கத்தால் விலைமதிப்பில்லா தனது உயிரை மாய்த்துக் கொண்டது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More News

பிரபல நடிகரை காதலிக்கின்றாரா சூப்பர் சிங்கர் பிரகதி?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிரகதி, அதன் பின்னர் தமிழ் திரைப்படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.

அஜித், விஜய், வரலட்சுமி குறித்து விஷால் அளித்த பேட்டி

நடிகர் விஷால் சமீபத்தில் கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி இந்திய திரையுலகமே பாராட்டும் அளவிற்கு திரைத்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.

கமல்ஹாசனின் மனிதாபிமான செயலால் உயிர்பிழைத்த பெண்

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து தமிழகத்தின் பல நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

சின்னத்திரையில் இருந்து மேலும் ஒரு நாயகி: விருது பெற்ற இயக்குனர் படத்தில் நடிக்கிறார்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு ஹீரோயினியாக வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் சின்னத்திரையில் ஜொலித்து கொண்டிருந்த பிரியா பவானிசங்கர்

பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் குறைந்ததால் மாடியில் இருந்து குதித்த கோவை மாணவி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தங்கள் தேர்வு முடிவை அறிந்து வருகின்றனர்.