யாஷிகா வெளியேற்றம் குறித்து சுஜா கூறியது என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,September 24 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வலுவான போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். யாஷிகா வீட்டில் இருக்கும்போதும், வெளியே வந்து கமல்ஹாசனிடம் பேசியபோதும் அவரது பேச்சில் ஒரு முதிர்ச்சி இருந்ததை பார்க்க முடிந்தது. 19 வயதில் இவ்வளவு தெளிவாக, முதிர்ச்சியாக அவர் பேசியது கமல்ஹாசன் உள்பட அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஒருசில நேரங்களில் யாஷிகா, ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டாலும் பெரும்பாலும் அவர்யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் யாஷிகாவின் வெளியேற்றம் குறித்து பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரான சுஜா வருணே தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'உங்களது வெளியேற்றத்தை நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் நீங்கள் ஒரு போராளி, உங்களது மனமுதிர்ச்சியை கண்டு வியக்கின்றேன். நீங்கள் இறுதி போட்டிக்கு செல்ல தகுதியானவர் என்று நான் ஏற்கனவே கூறியிருந்ததை ஞாபகப்படுத்துகிறேன். இருப்பினும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதை சகஜமாக எடுத்து கொண்ட உங்களுக்கு வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார்

சுஜாவின் இந்த டுவீட்டுக்கு நன்றி கூறிய யாஷிகா, 'இதுவரை நான் தாக்குப்பிடித்து இருந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

More News

விக்னேஷ்சிவனை வெற்றி கொண்ட நயன்தாரா

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ்சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள் என்பதும் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்பதும் தெரிந்ததே.

சர்வதேச விருது: விஜய்க்கு விஜயகாந்த் வாழ்த்து

தளபதி விஜய் 'மெர்சல்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக IARA விருதுகளின் சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருதினை வென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

ரொமான்ஸ், ஆக்சன், செண்டிமெண்ட் கலந்த 'வர்மா': டீசர் விமர்சனம்

சீயான் விக்ரம் மகன் துருவ் அறிமுகத்தில் தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'வர்மா' திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்க்கு கிடைத்த சர்வதேச அளவிலான மரியாதை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இது அடல்ட்ஸ் ஒன்லி ஷோ அல்ல: விஜிக்கு ஞாபகப்படுத்திய கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் வந்துவிட்டதை அடுத்து பிக்பாஸ் ஒரு இன்ப அதிர்ச்சியாக இறுதி போட்டிக்கு தேர்வானவர்களை அவர்களுடைய குடும்பத்தினர்களூடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பை வழங்கினார்.