close
Choose your channels

சர்வதேச விருது: விஜய்க்கு விஜயகாந்த் வாழ்த்து

Sunday, September 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் 'மெர்சல்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக IARA விருதுகளின் சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருதினை வென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த விருதை பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக "சிறந்த சர்வதேச நடிகர்" என்ற விருதை வென்ற நடிகர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல் மேலும் பல விருதுகள் பெற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்துடன் விஜய் குழந்தை நட்சத்திரமாக 'வசந்த ராகம், 'வெற்றி' மற்றும் 'சட்டம் ஒரு விளையாட்டு' ஆகிய படங்களிலும், ஹீரோவாக 'செந்தூரப்பாண்டி' என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.