close
Choose your channels

காதலியை மணந்தார் சன் டிவி சீரியல் நடிகர்.. சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து..!

Friday, December 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தனது காதலியை திருமணம் செய்து கொண்டதை அடுத்து சின்னத்திரை உலக பிரபலங்கள் பலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சன் டிவியில் ஒளிபரப்பான ’அபியும் நானும்’ என்ற சீரியலில் குருவி என்ற கேரக்டரில் மிகவும் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இந்த கேரக்டரில் அவர் சிறப்பாக நடித்ததை அடுத்து குருவி தமிழ்ச்செல்வன் என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். தற்போது அவர் ’மிஸ்டர் மனைவி’ மற்றும் ’புது வசந்தம்’ ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலியான பூர்ணிமா என்பவரை நேற்று முன்தினம் குருவி தமிழ்ச்செல்வன் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு சன் டிவி சீரியல்களில் நடிக்கும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் குருவி தமிழ்ச்செல்வன் தன்னுடைய திருமண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.