close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சன் டிவி சீரியல் நடிகை? சீரியலை பாதியில் விட்டுவிட்டு வருகிறாரா?

Saturday, September 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த ஆறு சீசன்களை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கும் நிலையில் புதுமையாக இந்த சீசனில் இரண்டு பிக்பாஸ் வீடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த சீசன் முந்தைய சீசன்களை விட வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் கசிந்த நிலையில் தற்போது சன் டிவி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததும் சீரியல் இருந்து பாதியில் விலகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்தான் நிவிஷா.

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மலர் என்ற சீரியலில் நடித்து வரும் நிவிஷா, பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததும் சீரியலில் இருந்து பாதியில் விலகி வந்து விட்டதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ஈரமான ரோஜாவே சீரியலில் வில்லியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் அப்பாஸ், பப்லு பிரித்விராஜ், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் குமரன், குக் வித் கோமாளி பிரபலம் ரவீனா, காக்கா முட்டை விக்னேஷ், சீரியல் நடிகர் விஷ்ணு, நடிகை ரச்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ், நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர், நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை சோனியா அகர்வால் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த பட்டியலில் நிவிஷாவும் இணைந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment