close
Choose your channels

பிறந்தநாள் பார்ட்டியில் சன் டிவி சீரியல் நடிகை.. கிளாமர் புகைப்படங்கள்..!

Friday, February 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பிறந்தநாள் பார்ட்டிக்கு கிளாமர் காஸ்ட்யூமில் சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

மாடல் அழகியான ப்ரீத்தி ஷர்மா ஆரம்பத்தில் ஹிந்தி மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் ’திருமணம்’ என்ற சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பின் ராதிகா தயாரித்த ’சித்தி 2’ சீரியல் அவருக்கு திருப்புமுனையை கொடுத்த நிலையில் அதன் பின்னர் அவர் கலர்ஸ் தமிழ், ஜீ டிவி உள்பட ஒரு சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களிலும் நடித்துள்ளார்

தற்போது அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’மலர்’ என்ற சீரியலில் நாயகியாக நடித்து வரும் நிலையில் அவரது கேரக்டருக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இவர் சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களையும் வைத்துள்ளார்.

இந்நிலையில் ’மலர்’ சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்களுடன் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்கு சென்றதாகவும் அங்கு எடுத்த புகைப்படங்களை ப்ரீத்தி ஷர்மா பதிவு செய்துள்ளார். கிளாமர் உடையில் பாட்டில் தனது சக நண்பர்களுடன் ரெஸ்டாரண்டில் சாப்பிடும் புகைப்படம் உட்பட பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.