தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்க ரெஜினா... சுனைனாவின் 'ரெஜினா' டிரைலர்..!

  • IndiaGlitz, [Tuesday,June 06 2023]

நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்த ‘ரெஜினா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த ட்ரெய்லரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் சுனைனாவின் புத்திசாலித்தனமான காட்சிகள் உட்பட பல காட்சிகள் உள்ளன. மேலும் இந்த ட்ரெய்லரில் பின்னணியில் கூறப்படும் ஒரு சிங்கத்தின் கதையை வைத்து இந்த படத்தின் கதையை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது. அந்த கதை இதுதான்:



ஒரு சிங்கம் காட்டுல இருக்குற எல்லா பொருளையும் எடுத்துட்டு போய் தன்னுடைய மொத்த தேவைக்காக தன் குகைக்கு உள்ளே வச்சுகிச்சாம். அதனால காட்டில் இருக்கிற மற்ற விலங்குகளுக்கு சாப்பிட எதுவுமே கிடைக்காமல் பயங்கரமான பசி. பசியை பொறுக்க முடியாத எல்லா விலங்குகளும் ஒண்ணா கூடி சிங்கத்தோட குகைக்கு தீ வைத்துவிட்டது. எப்பேர் பட்ட சிங்கமாக இருந்தாலும் குகைக்கு தீ வச்சா வெளியில் வந்து தான் ஆகணும்..

சுனைனா, நிவா ஆதிதன், ரிது மந்த்ரா, ஆனந்த் நாக், தீனா, விவேக் பிரசன்னா, உள்பட பலர் நடிப்பில் உருவான ‘ரெஜினா’ படத்தை சதீஷ் நாயர் இயக்கியுள்ளார். பவி கே பவன் ஒளிப்பதிவில் டாபி ஜான் படத்தொகுப்பில் சதீஷ் நாயர் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

'இந்தியன் 2' படத்தின் மெயின் வில்லன்.. மறைத்து வைத்த ரகசியம் இதுதான்..!

'இந்தியன் 2' படத்தில் மெயின் வில்லனாக பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் நடித்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

'கங்குவா' படத்தின் சில காட்சிகளை பார்த்த பிரபலம்.. முதல் விமர்சனம் என்ன தெரியுமா?

'கங்குவா' படத்தின் சில காட்சிகளை பார்த்ததாகவும் அந்த காட்சிகளை பார்த்து தான் மிரண்டு விட்டதாகவும் திரையுலக பிரபலம் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்த வாரம் வெள்ளியன்று 3 தமிழ் படங்கள் ரிலீஸ்.. ரசிகர்கள் மனதை வெல்லுமா?

கடந்த வாரம் வெள்ளி அன்று 'வீரன்' 'காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' உள்பட ஐந்து படங்கள் வெளியான நிலையில் மேற்கண்ட இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

குழந்தையின் புகைப்படத்தை பதிவிட சொன்ன ரசிகர்.. வைரமுத்துவை காரணம் காட்டி மறுத்த சின்மயி..!

பாடகி சின்மயிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் ரசிகர் ஒருவர் குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்யுங்கள் என்று கூறிய போது வைரமுத்துவை காரணம் காட்டி பதிவு செய்ய மறுத்தது பரபரப்பை

செக்ஸ் சாம்பியன்ஷிப்… உடலுறவை விளையாட்டாக அறிவித்து, மிரள வைத்த தகவல்!

பொதுவாக உடலுறவு குறித்து பேசுவதற்கே பலரும் கூச்சப்படும் நிலையில் உடலுறவு மேற்கொள்வதையே ஒரு விளையாட்டுப் போட்டியாக நடத்த திட்டமிட்டு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.