நீங்கள் இங்கிருந்து அனுப்பப் போவது ஒரு எம்பியை அல்ல, மத்திய அமைச்சரை.. சுந்தர் சி பிரச்சாரம்..!

  • IndiaGlitz, [Monday,April 15 2024]

நீங்கள் இங்கே இருந்து அனுப்பப் போவது ஒரு எம்பியை அல்ல, ஒரு மத்திய அமைச்சரை என தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி வேலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சியின் மனைவி குஷ்பு பாஜகவில் உள்ளார் என்பதும் அவர் கட்சியில் சில பொறுப்புகளை வகித்து வருகிறார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் குஷ்பு உடல் நல குறைவு காரணமாக தன்னால் தேர்தலில் பிரச்சாரம் செய்ய இயலவில்லை என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக இயக்குனர் சுந்தர் சி ஒரு சில இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஏசி சண்முகத்திற்கு வாக்கு கேட்டு சுந்தர் சி பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியபோது, ‘நீங்கள் இங்கே இருந்து அனுப்பப் போவது ஒரு எம்பிஐ அல்ல என்றும் ஒரு மத்திய அமைச்சரை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பதவியில் இல்லாத போதே ஏசி சண்முகம் உங்கள் தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வருகிறார், வெற்றி பெற்றால் தொகுதிக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார். சுந்தர் சி பிரச்சாரம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

More News

எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பாலாவுக்கே ஒரு இன்ப அதிர்ச்சி.. கொடுத்தது யார் தெரியுமா?

கேபிஒய் பாலா பொதுமக்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது அவருக்கே

மீண்டும் ஒரே படத்தில் இணைகிறார்களா ரஜினி-சத்யராஜ்? எந்த படம்? இயக்குனர் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் இணைந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பாக 'தம்பிக்கு எந்த ஊரு' 'மூன்று முகம்' 'மிஸ்டர் பாரத்' 'பாயும் புலி' 'நான் சிகப்பு மனிதன்' '

உலக அளவில் முதலிடம் பிடித்த 'விசில் போடு'.. 24 மணி நேரத்தில் எத்தனை மில்லியன் தெரியுமா?

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு விருந்தாக 'விசில் போடு' என்ற பாடல் வெளியானது

பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? அதிரடி கலக்கட்டுமா? 'கோட்' படத்தில் விசில் போடு பாடல்..!

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று சித்திரை புத்தாண்டு தினத்தில் விசில் போடு என்ற பாடல்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் தனுஷ் கொடுத்த 'ராயன்' அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்..!

தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் முடிந்தவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று