close
Choose your channels

நீங்கள் இங்கிருந்து அனுப்பப் போவது ஒரு எம்பியை அல்ல, மத்திய அமைச்சரை.. சுந்தர் சி பிரச்சாரம்..!

Monday, April 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீங்கள் இங்கே இருந்து அனுப்பப் போவது ஒரு எம்பியை அல்ல, ஒரு மத்திய அமைச்சரை என தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி வேலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சியின் மனைவி குஷ்பு பாஜகவில் உள்ளார் என்பதும் அவர் கட்சியில் சில பொறுப்புகளை வகித்து வருகிறார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் குஷ்பு உடல் நல குறைவு காரணமாக தன்னால் தேர்தலில் பிரச்சாரம் செய்ய இயலவில்லை என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக இயக்குனர் சுந்தர் சி ஒரு சில இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஏசி சண்முகத்திற்கு வாக்கு கேட்டு சுந்தர் சி பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியபோது, ‘நீங்கள் இங்கே இருந்து அனுப்பப் போவது ஒரு எம்பிஐ அல்ல என்றும் ஒரு மத்திய அமைச்சரை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பதவியில் இல்லாத போதே ஏசி சண்முகம் உங்கள் தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வருகிறார், வெற்றி பெற்றால் தொகுதிக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார். சுந்தர் சி பிரச்சாரம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.