close
Choose your channels

இவங்களுக்கு கல்யாணம் ஆவறதுக்குள்ள சிம்பு- விஷாலுக்கும் கல்யாணம் ஆகிடும்போல..  'காபி வித் காதல்' டிரைலர்

Monday, September 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’காபி வித் காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மூன்று அண்ணன் தம்பிகள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி 4 பெண்களை காதலிக்கும் ஒரு குழப்பமான கதையம்சம் கொண்ட இந்த படம் காமெடி பற்றும் ரொமான்ஸ் பாணியில் கதை கூறப்பட்டுள்ளது என்பது டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் ஆகிய மூன்று நாயகர்கள், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர்களை மாறி மாறி காதலிப்பதும் இதனால் ஏற்பட்ட குழப்பங்கள் தான் இந்த படத்தின் கதை என தெரியவருகிறது.

காமெடிக்கு யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லே கலக்குகின்றனர் என்பதும், டிடி மற்றும் சம்யுக்தா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்த படம் நிச்சயம் சுந்தர் சியின் வெற்றிப் பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சற்று முன் வெளியாகிய இந்த படத்தின் டிரைலர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment