இப்ப வந்தா கூட அந்த படம் வெற்றி பெறும்: 10 வருடங்களாக முடங்கியிருக்கும் படம் குறித்து சுந்தர் சி

  • IndiaGlitz, [Monday,April 01 2024]

கடந்த 2013 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'மதகஜராஜா’ என்ற திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகாத நிலையில் அந்த படம் இப்போது வந்தால் கூட வெற்றி அடையும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி நடிப்பில் உருவான 'மதகஜராஜா’ என்ற திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவானது என்பதும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பல வருடங்கள் தீவிரமாக முயற்சித்து ஒரு சில காரணங்களால் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’அரண்மனை 4’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சுந்தர் சி, ’2013 ஆம் ஆண்டு உருவாகிய அந்த படம் இப்போது வெளிவந்தாலும் நல்ல பொழுதுபோக்கு படமாகவும் வெற்றிப்படமாகவும் இருக்கும். நானும் விஷாலும் அந்த படத்தை காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறோம் என்று கூட சொல்லிவிட்டோம், ஆனால் அந்த தயாரிப்பாளர் கடன் பிரச்சனை காரணமாக எங்களுக்கு அந்த படத்தை தரவில்லை. அவருடைய அலுவலகம் திநகரில் தான் இருக்கிறது, நான் முகவரி தருகிறேன், நீங்களே போய் அவரிடம் இந்த படம் குறித்து கேளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது காவல்துறையில் புகார்.. 'பார்க்கிங்' பட கதைபோல் பிரச்சனை?

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது அவரது பக்கத்து வீட்டு பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதை அடுத்து ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' படத்தின் கதை போல் இருப்பதாக கூறப்படுகிறது.

வெற்றியோடு திரும்பி வருவேன்: ஜாபர் சாதிக் வழக்கின் சம்மன் குறித்து இயக்குனர் அமீர்..!

இயக்குனர் அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அந்த சம்மன் குறித்து அமீர் கூறிய ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் 'அர்ஜுன்ரெட்டி' ஹீரோயின்: வைரல் வீடியோ..!

விஜய் தேவரகொண்டா நடித்த 'அர்ஜுன் ரெட்டி' என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை ஷாலினி பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் வொர்க்-அவுட்

காயத்ரி, டயானா, ரிஷிட், ரீனா, கிம்.. 'துப்பறிவாளன் 2' அப்டேட் கொடுத்த விஷால்..!

நடிகர் விஷால், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரத்னம்' என்ற படத்தில் நடித்த முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் நடித்து இயக்கும் 'துப்பறிவாளன் 2' படத்தின் பணியில் உள்ளார்

ராகவா லாரன்ஸ் ஆரம்பித்த சேவை.. 20 வருடங்கள் கழித்து தொடரும் அடுத்த தலைமுறை இளைஞர்..!

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய சேவையை தற்போது அவரால் பயன் பெற்ற இளைஞர் அடுத்த தலைமுறையினருக்கு