சச்சின் கேள்விக்கு 'தோனி' பாணியில் பதில் கூறிய சுந்தர் பிச்சை

  • IndiaGlitz, [Thursday,July 04 2019]

சமீபத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தபோது அந்த போட்டியை வர்ணனை செய்து வந்த சச்சின் தெண்டுல்கர், இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை வந்திருக்கின்றார் என்பதை அறிந்து அவரே சுந்தர் பிச்சையை அவர் இருக்கும் இடத்திற்கு சென்று சந்தித்து, புகைப்படம் எடுத்து கொண்டார். இதுகுறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த சச்சின், 'எப்படி' என்ற கேள்வியை சுந்தர் பிச்சையை நோக்கி எழுப்பியிருந்தார். அதற்கு சுந்தர் பிச்சை, 'வழக்கமாக தோனி சொல்லும் வார்த்தையை தான் இதற்கு சொல்ல வேண்டும். பஹூத் பாதியா ('மிகவும் சிறப்பு') என்று கூறிய சுந்தர் பிச்சை அதன்பின்னர் 'உங்களுடன் இணைந்து போட்டியை கண்டு ரசித்தது பெரும் மகிழ்ச்சி என்றும், மீண்டும் உங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கின்றேன்' என்றும் பதிலளித்துள்ளார்.

சச்சினின் இந்த டுவீட்டுக்கும், சுந்தர் பிச்சையின் பதிலுக்கும் ஏராளமான லைக்ஸ்களும் ரீடுவீட்டுகளும் குவிந்து வருகின்றது

More News

'காதல் மன்னன்' ஜெமினிகணேசன் பேரன் நடிக்கும் அடுத்த படம்

பழம்பெரும் நடிகரும் தமிழ் சினிமாவின் 'காதல் மன்னன்' என்ற பெயர் பெற்றவருமான ஜெமினிகணேசனின் பேரன் அபினய், கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த

தன் நாட்டு பெண்களுக்காக 'பேட்மேனை' சந்தித்த பிராவோ

தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற, தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய

நயன்தாரா படத்தில் ஜான்சிராணியாக நடிக்கும் அனுஷ்கா!

சிரஞ்சீவியுடன் நயன்தாரா, தமன்னா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் 'சயிர நரசிம்மரெட்டி' படத்தில் நடிகை அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

'இன்று நேற்று நாளை 2' படத்தின் நாயகி யார்? 

தமிழ் சினிமாவின் முதல் 'டைம் டிராவல்' திரைப்படமான 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.

இது என்ன பிக்பாஸ் வீடா? பைத்தியக்கார இல்லமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு பாகங்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒன்று அல்லது இருவர் மட்டுமே சர்ச்சைக்குரியவர்களாக இருந்து வந்தனர்.