சன்னிலியோனை 1000 முறை கதற வைத்த படம்

  • IndiaGlitz, [Saturday,May 26 2018]

பாலிவுட் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சன்னிலியோன், தற்போது 'வீரமாதேவி' என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் தமிழ் உள்பட மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படம் ஒன்று அவரது அனுமதியின் பேரில் கடந்த சில மாதங்களாக தயாராகி வந்தது.

இந்த படம் சமீபத்தில் சன்னிலியோனுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்து 1000 முறை கதறி அழுததாக சன்னிலியோன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் செய்த சில விஷயங்களை நினைத்து வருத்தப்படுவதாகவும் சன்னிலியோன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணப்படத்தில் சன்னிலியோனின் சிறுவயது சம்பவங்கள், ஆபாச நடிகையாக மாறிய சூழ்நிலை, குடும்பம் உள்பட அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக படகுழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

'சாமி 2' டிரைலர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கி வரும் 'சாமி 2' திரைப்படம் இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து மிகபெரிய வரவேற்பை பெற்றது.

சமுத்திரக்கனியின் 'நிமிர்ந்து நில்' மீண்டும் ரிலீஸ் ஆவது ஏன்?

பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலாபால், சரத்குமார் நடித்த 'நிமிர்ந்து நில்' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி சமூக அக்கறையுடையவர் என்பது பல நேரங்களில் தெரிய வந்துள்ளது. நடிகர், நடிகர் சங்க பொருளாளர் பணிகளுக்கு இடையே அவர் செய்து வரும் சமூக சேவைகள் பாராட்டப்படும்

ரூ.824 கோடி வங்கி மோசடி: பிரபல சென்னை நகைக்கடை அதிபர் கைது

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்வது என்பது கடந்த சில வருடங்களாக சர்வ சாதரணமாக நடைபெற்று வரும் நிகழ்வாக உள்ளது

கமல்ஹாசனை சந்தித்த கண்சிமிட்டல் நாயகி

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'ஒரு ஆதார் லவ்' என்ற மலையாள படத்தின் டீசரில் ஒரே ஒரு கண்சிமிட்டல் மற்றும் புருவ நடனம் மூலம் இந்தியா முழுவதும் டிரெண்டுக்கு வந்தவர் நடிகை பிரியா வாரியர்.