close
Choose your channels

தொடர்ச்சியாக வெளிவரும் பெரிய ஸ்டார்களின் படங்கள்: ரசிகர்களுக்கு விருந்து

Sunday, September 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் கடந்த சில வாரங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வரும் நிலையில் இனிவரும் வாரங்களிலும் ஒவ்வொரு வாரமும் ஒரு பெரிய ஸ்டாரின் படம் வெளியாகவுள்ளதால் சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருப்பதாகவே கருதப்படுகிறது.

வரும் வெள்ளியன்று அதாவது செப்டம்பர் 21ஆம் தேதி சீயான் விக்ரமின் 'சாமி 2' திரைப்படம் வெளியாகவுள்ளது அதே தினத்தில் சிரிஷ் நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான 'ராஜா ரங்குஸ்கி' படமும் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து செப்டம்பர் 28ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார்கள் நடித்த 'செக்க சிவந்த வானம்' வெளியாகவுள்ளது. இந்த படத்துடன் பா.ரஞ்சித்தின் 'பரியேறும் பெருமாள்' மற்றும் ஜெய்யின் 'ஜருகண்டி' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து அக்டோபர் 5ஆம் தேதி விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் மற்றும் விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சசன்' ஆகிய படங்கள் வெளியாகின்றன.

இந்த நிலையில் வரும் அக்டோபர் 18ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் விஷாலின் 'சண்டக்கோழி 2', தனுஷின் 'வடசென்னை' , ஜோதிகாவின் 'காற்றின் மொழி' மற்றும் ஸ்ரேயாவின் 'அண்டாவ காணோம்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலே கூறியவற்றில் ஒருசில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது என்றாலும் வரும் வாரங்களில் ரசிகர்களுக்கு நல்ல திரைவிருந்து காத்திருக்கின்றன என்பது மட்டும் உண்மை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.