'புஷ்பா 2' எத்தனை மொழிகளில் உருவாகிறது தெரியுமா? அப்ப பான்-இந்தியா அல்ல, பான்-வேர்ல்ட்!

  • IndiaGlitz, [Sunday,July 24 2022]

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படம் சுமார் 170 கோடியில் உருவாக்கப்பட்ட நிலையில் 350 கோடி வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவான இந்த படத்தின் அடுத்த பாகம் வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இது குறித்த புகைப்படத்தை அல்லு அர்ஜுன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .

இந்த நிலையில் ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் 10 மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இந்திய மொழிகள் மட்டுமின்றி வெளிநாட்டு மொழிகளில் உருவாக இருப்பதால் இந்த படம் பான்-வேர்ல்ட் திரைப்படம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் பகத்பாசில், ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ள நிலையில் விஜய் சேதுபதியும் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்': படப்பிடிப்புக்கு முன்னரே அப்டேட் கொடுக்கும் நெல்சன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமான 'ஜெயிலர்' திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பிற்கு முன்னரே ரசிகர்களுக்கு சிறப்பு

முழுக்க முழுக்க வதந்தி, யாரும் நம்ப வேண்டாம்: 'வாரிசு' தயாரிப்பு நிறுவனம் அறிக்கை!

சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும் அதனை யாரும் நம்பவேண்டாம் என்றும் தளபதி விஜய்யின் 'வாரிசு' உள்பட பல திரைப்படங்களை தயாரித்து

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு விருது: மகள் ஐஸ்வர்யா பெற்று கொண்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு புதுவை மாநில கவர்னர் விருது வழங்கியதை அடுத்து அந்த விருதை அவரது சார்பாக அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். 

சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த சின்னத்தல:  இந்த ஆண்டாவது கோரிக்கை நிறைவேறுமா?

நடிகர் சூர்யா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மெக்சிகோவில் பிறந்த நாள் கொண்டாட்டம்: கிளாமர் பிகினியில் அக்கா-தங்கை நடிகைகள்!

பிரபல நடிகை சமீபத்தில் மெக்சிகோவில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவர் தனது சகோதரி உள்பட குடும்பத்தாருடன் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.