ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மானுடன் சூப்பர் சிங்கர் பூஜா.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,March 13 2023]

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பூஜா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஆகியவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ள தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் இவர்களில் ஒருவர் சூப்பர் சிங்கர் டைட்டில் பட்டம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் சீசன் 9 தொடங்கிய நாள் முதலே பூஜா வெங்கட்ராமன் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறார் என்பதும் இவருக்காக டிஜே பிளாக் தனி சிரத்தை எடுத்து பாடல்களை போட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து பூஜாவின் பெரியம்மா செய்த பிராங்க் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் பூஜா ஏற்கனவே ஒருசில திரை உலக பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் சிறுவயதிலேயே மேடையில் பாடியதற்காக பூஜா பரிசு பெற்றுள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

அதேபோல் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஒரு பாடலில் கோரஸ் பாடகிகளில் ஒருவராக பூஜா பாடியுள்ளதாகவும் தெரிகிறது. அந்த பாடலின் ஒலிப்பதிவின்போது இவர் ஏஆர் ரஹ்மானுடன் பூஜா புகைப்படம் எடுத்துள்ளார்.

மொத்தத்தில் பூஜா சூப்பர் சிங்கர் டைட்டில் பட்டம் வெல்வார் என்றும் அதன் பிறகு அவர் திரையுலகிலும் பல பாடல்களை பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினி முதல் ராகுல் காந்தி வரை.. 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

'ஆர்.ஆர்.ஆர்'  படத்தில இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதை அடுத்து படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களின்

நடிகை ஜாங்கிரி மதுமிதாவின் மகனா இவர்? க்யூட் புகைப்படம்..!

நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த க்யூட் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. 

டூபீஸ் பிகினி உடையில் அமலாபால்.. வேற லெவல் வீடியோ..!

நடிகை அமலாபால் கடந்து சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக சமீபத்தில் அவர் தனது நண்பர்களுடன்

குழந்தைகளுடன் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சி: ஷாலினி அஜித் பகிர்ந்த மாஸ் புகைப்படம்..!

அஜித் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இணையதளங்களின் வைரல் ஆகி வருகின்றன. 

ஆஸ்கர் விருதை வென்ற 'அவதார்'; விருதுகள் குறித்த முக்கிய தகவல்கள்..!

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழில் தயாரான 'The Elephant Whisperers' என்ற திரைப்படம் உள்பட பல திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது