தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த 'ஜெயிலர்' நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,September 01 2022]

தனுஷின் அடுத்த திரைப்படமான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ படத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றதை அடுத்து அவர் நடித்து முடித்துள்ள ’வாத்தி’ மற்றும் ’நானே வருவேன்’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

இந்த நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ‘கேப்டன் மில்லர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் விநாயகன் வில்லன் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’ஜெயிலர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகயிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணையும் பிரபல தமிழ் ஹீரோ?

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகயிருக்கும் 'ஜெயிலர்' படம் குறித்த அறிவிப்பு

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்யும் அடுத்த பிரபலத்தின் படம் இதுதான்!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபல நடிகர்களின் திரைப்படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

காதலியை கரம்பிடித்தார் 'குக் வித் கோமாளி' புகழ்:  வைரலாகும் திருமண புகைப்படங்கள்

'குக் வித் கோமாளி'  உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமான புகழ் தனது நீண்ட நாள் காதலியை இன்று திருமணம் செய்ய இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே

இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து வருகிறோம், ஆனால்.. இளையராஜா குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்!

இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து வருகிறோம், ஆனால் எங்களுடைய சேருமிடம் தமிழ்நாடு தான் என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள வீடியோ

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய திரையுலக பிரபலங்கள்: புகைப்படங்கள், வீடியோக்கள் வைரல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும், மக்கள் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தும், வீட்டில் விநாயகர் சிலைகளை வைத்து