close
Choose your channels

சூப்பர் கண்ணா: 'ராக்கெட்டரி' படம் குறித்து ரஜினிகாந்த் கூறியது என்ன தெரியுமா?

Monday, July 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாதவன் நடித்து, இயக்கி, தயாரித்த ’ராக்கெட்டரி’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்தன. இதனை அடுத்து இந்த படத்தை மக்கள் ஆர்வத்துடன் சென்று பார்த்து வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஏற்கனவே ’ராக்கெட்டரி’ படத்தை பார்த்து பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ’ராக்கெட்டரி’ திரைப்படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றும் குறிப்பாக இளைஞர்கள் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ’ராக்கெட்டரி’ திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் பார்க்க வேண்டும்.

நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு ஆளாகி தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்மபூஷன் நம்பி நாராயணன் வரலாற்றை மிக தத்ரூபமாக நடித்து இயக்கி உள்ளார் மாதவன்.

இயக்குனராக முதல் படத்திலேயே தலைசிறந்த இயக்குனர்களுக்கு இணையானவர் என்று நிரூபித்திருக்கிறார். இந்த படத்தை கொடுத்ததற்காக மாதவனுக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும்’ என ரஜினி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment