ரஜினி மக்கள் மன்றம்: ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு ரசிகர் மன்றமாக தொடரும் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரஜினி மக்கள்‌ மன்ற நிர்வாகிகளுக்கும்‌, உறுப்பினர்களுக்கும்‌, என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும்‌ வணக்கம்‌. நான்‌ அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள்‌ மன்றத்‌தின்‌ பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள்‌ மன்ற நிர்வாகிகள்‌ மற்றும்‌ ரசிகர்கள்‌ மத்தியில்‌ கேள்விக்குறியாக இருக்கிறது அதை விளக்கவேண்டியது என்னுடைய கடமை.

நான்‌ அரசியல்‌ கட்சி‌ ஆரம்பித்து, அரசியலில்‌ ஈடுபட ரஜினிகாந்த்‌ ரசிகர்‌ நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள்‌ மன்றமாக மாற்றி, மாநில அளவிலும்‌, மாவட்ட அளவிலும்‌ பல பதவிகளையும்‌, பல சார்பு அணிகளையும்‌ உருவாக்‌கினோம்‌.

காலச் சூழலால்‌ நாம்‌ நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்‌தில்‌ அரசியலில்‌ ஈடுபடப்போகும்‌ எண்ணம்‌ எனக்கில்லை, ஆகையால்‌ ரஜினி மக்கள்‌ மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள்‌ எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள்‌ மன்றத்தில் உள்ள செயலாளர்கள்‌, இணை, துணை செயலாளர்கள்‌ மற்றும்‌ செயற்குழு உறுப்பினர்களுடன்‌ மக்கள்‌ நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த்‌ ரசிகர்‌ நற்பணி மன்றமாக செயல்படும்‌ என்று அன்புடன்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

வாழ்க தமிழ்‌ மக்கள்‌! வளர்க தமிழ்‌ நாடு!! ஜெய்ஹிந்த்‌!!!

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
 

More News

விஜய் பாணியில் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது தெரிந்ததே

வேற லெவலுக்கு செல்கிறது சூர்யாவின் 'சூரரை போற்று': அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவான 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் ஓடிடியில் ரிலீஸ்

அரசியலுக்கு வருகின்றேனா? மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு முன் ரஜினி பேட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களும்

ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்காக விஜய் ரசிகர்கள் செய்த உதவி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் திறக்கவில்லை என்பதை அடுத்து ஆன்லைனில் தான் வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

எல்.முருகனை கொண்டாடுங்கள்: சூர்யா, கார்த்தி, விஷாலுக்கு தமிழ் நடிகை கோரிக்கை!

தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்ற நிலையில் அவரை சினிமாத்துறையினர் கொண்டாட வேண்டும் என நடிகையும், பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதளப் பக்கத்தில்