close
Choose your channels

நாளை ரஜினி பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு செம்ம விருந்தளிக்கும் லைகா..!

Monday, December 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’தலைவர் 170’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் பிறந்தநாள் டீசர் வீடியோ வெளியாகும் என்று லைக்கா நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

தலைவர் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு ’தலைவர் 170’ படத்தின் டைட்டில் மற்றும் பிறந்தநாள் டீசர் வீடியோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இதனை அடுத்து ரஜினி ரசிகர்களுக்கு நாளை செம விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து வரும் ‘தலைவர் 170’ திரைப்படம் அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment