close
Choose your channels

'ஜெயிலர்' முன்பதிவு.. ஒரு சில நிமிடங்களில் காலியான டிக்கெட்டுக்கள்.. 2வது முன்பதிவில் ஒரு ஆச்சரியம்..!

Sunday, August 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் பத்தாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இன்று காலை இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் சென்னையின் முக்கிய திரையரங்குகளில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தின் டிக்கெட்டுகளை பல ஐடி நிறுவனங்கள் மொத்தமாக வாங்கிருப்பதாகவும் தங்கள் ஊழியர்களுக்கு இலவசமாக டிக்கெட்டுகளை கொடுத்து விடுமுறையும் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மட்டுமின்றி 11, 12, 13 ஆகிய தேதிகளுக்கு விறுவிறுப்பாக டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’ஜெயிலர்’ திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கினாலும் இரண்டாவது நாளில் அதாவது ஆகஸ்ட் 11ஆம் தேதி அதிகாலை காட்சிகளுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் காட்சி 6 மணிக்கு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.