சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

  • IndiaGlitz, [Friday,July 09 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக அமெரிக்கா சென்று இருந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சென்னை திரும்பியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் ரஜினிக்கு உடல் பரிசோதனை செய்து முடிக்கப்பட்டதாக கடந்த சில நாட்களுக்க்கு முன் செய்தி வெளியானது. மேலும் அமெரிக்காவில் ரசிகர்களுடன் மற்றும் அமெரிக்க தமிழர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உடல் பரிசோதனையை முடித்துக் கொண்ட ரஜினிகாந்த் நேற்று அதிகாலை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பயணம் ஒரு நாள் தாமதமானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் காரில் ஏறும் காட்சியின் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பியதை அடுத்து ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜீவஜோதியின் வாழ்க்கை படமாகிறது...! அதுவும் பல மொழிகளில்....

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில், ஜீவஜோதியின் வாழ்க்கை படமாக உள்ளது. இந்த திரைப்படத்தை ஜங்க்லீ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

விண்ணை தாண்டியும் வரவேணாம், வீட்டை தாண்டியும் வரவேணாம்: சிம்புவின் 'தப்பு பண்ணிட்டேன்' பாடல்!

சிம்பு பாடிய 'தப்பு பண்ணிட்டேன்' என்ற பாடலின் டீசர் நேற்று வெளியான நிலையில் இன்று அந்த பாடல் வெளியாகும் என இந்த பாடலின் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா ஏற்கனவே அறிவித்திருந்தார்

டாக்டர் மகேந்திரனை அடுத்து திமுகவை இணைகிறாரா பத்மப்ரியா?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார் என்பதும் அந்த கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒரு சட்டசபை தேர்தலை சந்தித்து விட்டது என்பதும்

தமிழகத்தில் 45 நாட்களில் மருத்துவமனை....! "டீமேஜ்" நிறுவனம் உலக சாதனை படைத்தது எப்படி...?

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வெறும் 45 நாட்களில் மருத்துவமனையை உருவாக்கியுள்ளது

ராஷிகண்ணாவின் வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ!

பிரபல தெலுங்கு நடிகையான ராஷிகண்ணா தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை அடுத்து அவர் ஜெயம் ரவியின்