ரஜினி படத்திற்காக இறக்குமதி ஆகியுள்ள ஜெர்மனி-இங்கிலாந்து ஸ்டண்ட் இயக்குனர்கள்

  • IndiaGlitz, [Friday,February 24 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சி ஒன்றுக்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாட்டில் இருந்து ஸ்டண்ட் இயக்குனர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் சென்னை வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ரஜினியுடன் வெளிநாட்டு ஸ்டண்ட் நடிகர்கள் மோதும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்கும் எமிஜாக்சன் தனது கேரக்டர் குறித்த புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். எந்திரன்' படத்தின் ஐஸ்வர்யா ராய் கேரக்டருக்கும் '2.0' படத்தின் தனது கேரக்டருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், இந்த படத்தில் தன்னுடைய காட்சிகள் அதிகளவு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய் 61' படமும் '3' செண்டிமெண்டும்....

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒருசில செண்டிமெண்ட்டுகள் தற்போது தெரியவந்துள்ளன

ராகவா லாரன்ஸின் 'சிவலிங்கா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் நடித்த பெரும் எதிர்பார்ப்புக்குள்ள திரைப்படமான 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. 'காஞ்சனா' சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் வெளியாகும் ராகவா லாரன்ஸ் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சசிகுமாருடன் மீண்டும் இணையும் வெற்றிப்பட இயக்குனர்

சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்த முத்தையா அதன்பின்னர் கார்த்தி நடித்த 'கொம்பன்' மற்றும் விஷால் நடித்த 'மருது' ஆகிய வெ'ற்றிப்படங்களை இயக்கினார்...

விஜய் ஆண்டனியின் எமன்: பாசிட்டிவ் விமர்சனமும் தமிழக அரசின் வரிவிலக்கு...

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' மற்றும் 'சைத்தான்' ஆகிய படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் இன்று அவர் நடித்த அடுத்தபடமான 'எமன்' உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகின்றது....

மு.க.ஸ்டாலின் சந்திப்பு எதிரொலி: ரகசிய வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி உத்தரவா?

தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஜனநாயக படுகொலை நடந்ததாகவும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை ஏற்காமல் தாங்கள் சபைக்காவலர்கள் மற்றும் போலீசாரால் வெளியேற்றப்பட்டதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார்...