close
Choose your channels

விஜய் 61' படமும் '3' செண்டிமெண்டும்....

Friday, February 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒருசில செண்டிமெண்ட்டுகள் தற்போது தெரியவந்துள்ளன. குறிப்பாக இந்த படமும் '3' என்ற நம்பரும் செண்டிமெண்டாக அமைந்துள்ளது

விஜய் நடித்த 'நண்பன்' படத்தில் உதவி இயக்குனராகவும், தெறி' படத்தின் இயக்குனராகவும் பணிபுரிந்த அட்லி மூன்றாம் முறையாக விஜய்யுடன் இணைகிறார்

கத்தி, தெறி, படங்களுக்கு பின்னர் நடிகை சமந்தா மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைகிறார்

துப்பாக்கி, ஜில்லா படங்களுக்கு பின்னர் நடிகை காஜல் அகர்வால் மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைகிறார்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், உதயா மற்றும் 'அழகிய தமிழ்மகன்' படங்களுக்கு பின்னர் மூன்றாம் முறையாக விஜய்யுடன் இணைகிறார்

நண்பன், தலைவா படங்களுக்கு பின்னர் நடிகர் சத்யராஜ் மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைகிறார்

விஜய் நடித்த 'குஷி' படத்தை இயக்கியவரும், விஜய்யின் நண்பன் படத்தில் நடித்தவருமான எஸ்.ஜே.சூர்யா மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைகிறார்.

இவ்வாறு மூன்று செண்டிமெண்ட்களுடன் உருவாகி வரும் இந்த படம் 'தெறி', 'பைரவா' படங்களுக்கு பின்னர் மூன்றாவது வெற்றி படமாக விஜய்க்கு அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.