ரஜினியின் '2.0' தெலுங்கு ரிலீஸ் உரிமையின் வியாபாரம் இத்தனை கோடியா?

  • IndiaGlitz, [Monday,August 28 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்த மேக்கிங் வீடியோ இந்த படத்தின் வியாபாரத்திற்கு பெரிதும் உதவியுள்ளதாக கருதப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ரிலீஸ் உரிமை ரூ.81 கோடிக்கு முன்னணி நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த 'எந்திரன்' திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூ.27 கோடிக்கு விற்பனையாகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் 2ஆம் பாகமான '2.0' மூன்று மடங்கு வியாபாரம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஜூலி-ஆர்த்தி

பிக்பாஸ் வீட்டில் இன்று ஜூலி மற்றும் ஆர்த்தி நுழைய அதிக வாய்ப்பு உள்ளது என்பதை சில நிமிடங்களுக்கு பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோ மூலம் ஜூலியும், ஆர்த்தியும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது...

அஜித், விஜய் ரசிகர்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட காயத்ரி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போதிலும் இன்னும் ஒருசிலர் மீது ரசிகர்களுக்கு ஆத்திரம் தீரவில்லை. குறிப்பாக ஓவியாவின் மனநிலை தடுமாற்றத்திற்கு காரணமான காயத்ரி, ஜூலி, ஆரவ் மீதான கோபம் இன்னும் தீரவில்லை...

சென்னையில் 'விவேகம்' செய்த புதிய சாதனை

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த வியாழன் அன்று வெளியான 'விவேகம்' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்தபோதிலும் இந்த படத்தின் ஓப்பனிங் வசூலை இந்த விமர்சனங்கள் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதற்கு பாக்ஸ் ஆபீஸ் வசூல் விபரங்களே சாட்சியாக உள்ளது...

விஜயகாந்த் வீட்டுக்கு வந்த புதிய விருந்தினர் யார் தெரியுமா?

கேப்டன் விஜயகாந்த் தற்போது தீவிர அரசியலில் இல்லாதபோதிலும் அவ்வப்போது மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு இன்று முதல் ஒரு புதிய விருந்தினர் வந்துள்ளர்...

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் பரபரப்பு நடிகை

கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்தும், அதிக வெற்றிகளை கொடுத்து வரும் நடிகர் விஜய்சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' நல்ல வெற்றியை பெற்ற நிலையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி இவர் நடித்த மற்றொரு படமான 'புரியாத புதிர்' படம் வெளியாகவுள்ளது...