close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஜூலி-ஆர்த்தி

Monday, August 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இன்று ஜூலி மற்றும் ஆர்த்தி நுழைய அதிக வாய்ப்பு உள்ளது என்பதை சில நிமிடங்களுக்கு பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோ மூலம் ஜூலியும், ஆர்த்தியும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த இருவரும் எண்ட்ரி பார்வையாளர்களையும் பங்கேற்பாளர்களையும் ரசிக்க வைக்குமா? என்பது கேள்விக்குறிதான். இதுவரை டுவிட்டரில் வெளியாகிய கமெண்ட்டுகளில் இருந்து ஜூலிக்கு கடும் எதிர்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆர்த்தி மேல் தற்போது யாருக்கும் கோபம் இல்லை என்றாலும் இனிமேல் அவர் நடந்து கொள்வதை பொருத்துதான் அவருக்கு ஆதரவு கிடைக்கும்

ஏற்கனவே நான்கு புதுமுகங்கள், தற்போது இரண்டு பழைய முகங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த போதிலும், ஓவியா இல்லாத பிக்பாஸ் நிலவு இல்லாத வானம் போல் வெறுமையாக காட்சி அளிக்கின்றது என்பதை மறுக்க முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.