தலைவர்-தல படங்களின் ஒற்றுமைகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்திற்கும் தல அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்திற்கும் தற்செயலாக ஒருசில ஒற்றுமைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கபாலி படத்தில் ரஜினிகாந்த் அவர்களும், 'வேதாளம்' படத்தில் அஜீத் அவர்களும் கேங்க்ஸ்டாராக நடித்து வருவதும், இருவரும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் 'கபாலி ரஜினியும், 'வேதாளம்' அஜீத்தும் தங்கள் உண்மையான வயதுக்குரிய கேரக்டரில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேலும் ஒரு ஒற்றுமையாக இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தற்போது ஒரே இடத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி, பில்லா, போக்கிரி, மங்காத்தா போன்ற பல படங்களின் படப்பிடிப்பு நடைபெற்ற சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில்தான் தற்போது 'கபாலி' மற்றும் 'வேதாளம்' படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் ரஜினி-அஜீத் சந்திப்பின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் 'கபாலி' படத்தயாரிபாளர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் 'வேதாளம்' படத்தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் என்பதும் 'ஏ.எம்.ரத்னம் தயாரித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் திருட்டு விசிடி தயாரிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தபோது கலைப்புலி எஸ்.தாணு காவல்துறையினர் உதவியுடன் நடவடிக்கை எடுக்க உதவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout