பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Friday,September 18 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு மே மாதம் பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் இணைந்தார். அவருடைய சமூக வலைத்தளத்தை 2.28 மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர். இந்த ஒன்றரை வருடத்தில் அவர் செய்த டுவீட்டுக்கள் மிகவும் குறைவானதே. ஆனால் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு டுவீட்டும் ஆயிரக்கணக்கில் லைக்குகள் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இம்மாதம் மட்டுமே அவர் இதுவரை இரண்டு டுவீட்டுக்களை அதுவும் அடுத்தடுத்த நாட்களில் பதிவு செய்துள்ளார். நேற்று முன் தினம் 'கபாலி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை பதிவு செய்த ரஜினிகாந்த், நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றபோதும் அவருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜெயலலிதா சமீபத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றபோதும், அப்துல் கலாம் அவர்களின் மறைவின்போதும், சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்ட முடிவு செய்தபோதும் அவர் டுவீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விக்ரமை இயக்குவது எப்போது? ஏ.ஆர்.முருகதாஸ் பதில்

'ஐ' படத்தை அடுத்து விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

ஒரே நாளில் 8 காட்சிகளா? புலியின் அடுத்த சாதனை

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் 'யூ' சர்டிபிகேட் பெற்று வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் இன்று ரிலீஸ் தேதியுடன் முன்னணி பத்திரிகையில் விளம்பரமும் வெளிவந்துள்ளது.....

கமலிடம் மன்னிப்பு கேட்டது ஏன்? ராஜேஷ் எம்.செல்வா

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாகி, கமல் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்தபோது கமலுடன் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.....

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாவாரா தல-தளபதி நாயகி?

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழிக்கேற்ப திரையுலகில் நுழைந்த ஒருசில வருடங்களிலேயே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகியாகிவிட்டார் நடிகை ஸ்ருதிஹாசன்......

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா விடலை விருந்து

சிறந்த இசையமைப்பாளராக அறியப்படும் ஜி.வி.பிரகாஷ் ‘டார்லிங்’ என்ற வெற்றிப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். எந்த ஒரு துறையிலும் முதல் முயற்சியைப் போலவே இரண்டாவது முயற்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது. அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் சென்னை இளைஞராக நடித்திருக்கும் இந்தப் படம் அதற்கான த