கேபிரில்லாவை முதுகில் சுமந்த சுரேஷ்: நாளுக்கு நாள் அதிகமாகும் ஹீரோயிஸம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்கில் 3 போட்டியாளர்களை அதிக நேரம் முதுகில் சுமந்து நிற்க வேண்டும் என்ற டாஸ்க் வைக்கப்படுகிறது. ரியோ, வேல்முருகன் மற்றும் கேப்ரில்லா ஆகிய மூவரை சுமக்க போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் வேல்முருகனை ஆரியும், ரியோவை பாலாஜி முருகதாஸும் முதுகில் சுமக்க தேர்வாகினர்

இந்த நிலையில் கேப்ரில்லாவை முதுகில் சுமப்பது யார் என்ற கேள்வி எழுந்தபோது சுரேஷ் சற்றும் தாமதிக்காமல் எழுந்து கேப்ரில்லாவை முதுகில் சுமந்தார். ஒரு கட்டத்தில் வியர்த்து விறுவிறுத்து அவரால் சமாளிக்க முடியாமல் போனாலும் அவர் மனதை கட்டுப்படுத்தி கேப்ரில்லாவை முதுகில் சுமந்தார். ’வேண்டாம் நான் இறங்கி கொள்கிறேன்’ என்று கேப்ரில்லா கூறியதைப் பொருட்படுத்தாத சுரேஷ் ’இறங்க வேண்டாம்’ என மறுத்து தாக்குப்பிடித்து நின்றார். ஆனால் கேப்ரில்லா தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே இறங்கிவிட்டார். 

கடந்த 10 நாட்களாக தந்திரத்தாலும் திறமையான வாய் பேச்சிலும் அனைவரையும் வென்று கொண்டு இருந்த சுரேஷ் தற்போது உடலளவிலும் தனது பலத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டதால் நாளுக்குநாள் அவரது ஹீரோயிசம் அதிகரித்து வருவதாக கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது

More News

நள்ளிரவில் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய மாடல் அழகி: சென்னையில் பரபரப்பு!

சென்னை அருகே நள்ளிரவில் குடிபோதையில் மாடல் அழகி ஒருவர் காரை சாலையில் தாறுமாறாக ஓட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

'800' படத்திற்கு ஆதரவு: விஜய்சேதுபதிக்கு வலை விரிக்கின்றார்களா குஷ்பு, அண்ணாமலை? 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பல திரையுலக பிரமுகர்கள் அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கொரோனாவுக்கு பின் தமன்னா வெளியிட்ட 3 நிமிட வீடியோ வைரல்!

சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை தமன்னா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவில் இருந்து குணமானார்

கொயட் பண்ணுடா: 'மாஸ்டர்' படம் குறித்த அனிருத்தின் அதிரடி அறிவிப்பு!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் திரையரங்குகள்

உண்மைக்குப் புறம்பான விஷயங்களையே ஸ்டாலின் தொடர்ந்து பேசுகிறார்… அமைச்சர் காமராஜ் காட்டம்!!!

நெல் கொள்முதல் களநிலவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்