close
Choose your channels

சூர்யாவின் 'எஸ் 3' டீசரின் ரன்னிங் டைம்

Saturday, November 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'எஸ் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சூர்யா ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 7ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை வெளிவரவுள்ளது என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். மேலும் இந்த டீசரின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது இந்த டீசர் ஒரு நிமிடம் 16 வினாடிகள் ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.