சூர்யாவின் 'எஸ் 3' டீசர் விமர்சனம்

  • IndiaGlitz, [Monday,November 07 2016]

சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 'எஸ்3' படத்தின் டீசர் சற்று முன் வெளியாகியுள்ளது.
ஒருநிமிடம் 23 வினாடிகள் உள்ள இந்த படத்தின் டீசர் நாம் ஏற்கனவே கூறியிருந்தபடி 'வேதாளம்', 'தெறி' ஸ்டைலில் 'ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்' என்ற பாடலுடன் அட்டகாசமாக தொடங்குகிறது.
வெளிநாட்டு லொகேஷனில் ரன்வேயில் ஓடும் விமானம், விமானங்களுக்கு இடையே ஓடும் கார்களின் கூட்டம், டிரக்குகளின் கவிழ்ப்பு, என டீசரின் ஆரம்பமே விறுவிறுப்பாக உள்ளது.
நான் பார்த்ததெல்லாம் திங்கிற ஓநாய் இல்லை, பசிச்சா மட்டும் வேட்டையாடுற சிங்கம், இப்ப கொலைப்பசியில இருக்கேன். எது கிடைச்சாலும் வேட்டையாடணும்ங்கிற வெறியில இருக்கேன். எதிர்ல எவன் வந்தாலும் ஏறி மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பேன்' என்ற சூர்யாவின் ஆக்ரோஷமான வசனம் அனைவரையும் உசுப்பேற்றும் வகையில் உள்ளது.
மிகக்குறைந்த காட்சிகளில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி மற்றும் வில்லன்கள் தோன்றுவதால் அவர்களுடைய கேரக்டர்களின் தன்மையை இந்த டீசரின் மூலம் ஊகிக்க முடியவில்லை. பிரியனின் கேமிராவுக்கு செம வேலை என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. ஆக்சன் படத்திற்கான கச்சிதமான இசையை ஹாரீஸ் ஜெயராஜ் கொடுத்து விறுவிறுப்பை அதிகரித்துள்ளார்.
மொத்தத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு ஆக்சன் படத்துக்குரிய அத்தனை அம்சங்களும் இந்த டீசரில் தெரிவதால் ஆக்சன் பிரியர்களுக்கு டிசம்பர் 16 அன்று ஒரு முழுநீள விருந்து காத்திருக்கின்றது என்பது மட்டும் உறுதி.

More News

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ஹாலிவுட் வில்லன்?

தனுஷ் நடித்த 'கொடி' வெற்றிப்படமாக உருவாகியுள்ள நிலையில் தற்போது அவர் 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வடசென்னை'...

ஜெயம் ரவி-விஜய் படத்தில் சென்னையின் பிரபல தொழிலதிபர்

இயக்குனர் விஜய் இயக்கிய 'தேவி' திரைப்படம் மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்ததே...

இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரபல இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரனின் கலையுலக வாரிசான வெங்கட்பிரபு தற்போதைய கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்...

விஷாலின் மேலும் ஒரு மகத்தான உதவி

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் மூலம் நலிந்த நடிகர், நடிகைகளுக்கு பெரும் உதவி செய்யப்பட்டு வருகிறது என்பதை அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை பார்த்து வருகிறோம்...

'காஷ்மோரா'வின் கலக்கலான சென்னை வசூல் நிலவரம்

கார்த்தி நடித்த 'காஷ்மோரா', திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி வெற்றி படமாக அறிவிக்கப்பட்டுள்ளது...