close
Choose your channels

சூர்யாவின் 'எஸ் 3' டீசர் விமர்சனம்

Monday, November 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 'எஸ்3' படத்தின் டீசர் சற்று முன் வெளியாகியுள்ளது.
ஒருநிமிடம் 23 வினாடிகள் உள்ள இந்த படத்தின் டீசர் நாம் ஏற்கனவே கூறியிருந்தபடி 'வேதாளம்', 'தெறி' ஸ்டைலில் 'ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்' என்ற பாடலுடன் அட்டகாசமாக தொடங்குகிறது.
வெளிநாட்டு லொகேஷனில் ரன்வேயில் ஓடும் விமானம், விமானங்களுக்கு இடையே ஓடும் கார்களின் கூட்டம், டிரக்குகளின் கவிழ்ப்பு, என டீசரின் ஆரம்பமே விறுவிறுப்பாக உள்ளது.
நான் பார்த்ததெல்லாம் திங்கிற ஓநாய் இல்லை, பசிச்சா மட்டும் வேட்டையாடுற சிங்கம், இப்ப கொலைப்பசியில இருக்கேன். எது கிடைச்சாலும் வேட்டையாடணும்ங்கிற வெறியில இருக்கேன். எதிர்ல எவன் வந்தாலும் ஏறி மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பேன்' என்ற சூர்யாவின் ஆக்ரோஷமான வசனம் அனைவரையும் உசுப்பேற்றும் வகையில் உள்ளது.
மிகக்குறைந்த காட்சிகளில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி மற்றும் வில்லன்கள் தோன்றுவதால் அவர்களுடைய கேரக்டர்களின் தன்மையை இந்த டீசரின் மூலம் ஊகிக்க முடியவில்லை. பிரியனின் கேமிராவுக்கு செம வேலை என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. ஆக்சன் படத்திற்கான கச்சிதமான இசையை ஹாரீஸ் ஜெயராஜ் கொடுத்து விறுவிறுப்பை அதிகரித்துள்ளார்.
மொத்தத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு ஆக்சன் படத்துக்குரிய அத்தனை அம்சங்களும் இந்த டீசரில் தெரிவதால் ஆக்சன் பிரியர்களுக்கு டிசம்பர் 16 அன்று ஒரு முழுநீள விருந்து காத்திருக்கின்றது என்பது மட்டும் உறுதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.