'கபாலி'யுடன் கனெக்சன் ஆனது சூர்யாவின் 'S3'

  • IndiaGlitz, [Friday,September 23 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பது அறிந்ததே. இந்த படத்தின் மலேசிய ரிலீஸ் உரிமையை பெற்ற மாலிக் ஸ்டிரீம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை இந்த படத்தால் பெற்றது.
இந்நிலையில் இந்த நிறுவனம் தற்போது சூர்யாவின் 'S3'படத்தின் மலேசிய ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்நிறுவனம், 'S3'படத்தின் மலேசிய படப்பிடிப்பின்போது பெரும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

More News

'பைரவா' தமிழக ரிலீஸ் உரிமை. அதிகாரபூர்வ தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் திருநாளில்...

அரவிந்த்சாமி-த்ரிஷாவின் சதுரங்கவேட்டை-2 படத்தின் கூடுதல் தகவல்கள்

'சதுரங்க வேட்டை 2' படத்தில் அரவிந்தசாமி, த்ரிஷா முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ள தகவலை ஏற்கனவே நேற்று பார்த்தோம்...

தனுஷூக்கு ஆஸ்கார் பரிசு கிடைக்க அரிய வாய்ப்பு

தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த 'விசாரணை' திரைப்படம் தேசிய விருது உள்பட பல சர்வதேச விருதுகளை குவித்தது என்பதை அறிவோம்.

அஜித்தை ஆத்திரப்பட வைத்த 'அஜித் 57' குழுவினர்

கோலிவுட் ஹீரோக்களில் அஜித் மிகவும் அமைதியானவர், படக்குழுவினர்களிடம் மிகவும் அன்பாக பழகுபவர் என்றுதான் அனைவருக்கும் தெரியும்..

'தொடரி' திரைவிமர்சனம் : தடம் மாறிய பயணம்

இயக்குனர் பிரபு சாலமன் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவருடன் நடிகர் தனுஷும் இணைந்திருப்பதால் ‘தொடரி’ படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.