close
Choose your channels

'பைரவா' தமிழக ரிலீஸ் உரிமை. அதிகாரபூர்வ தகவல்

Friday, September 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் திருநாளில் வெளிவரவுள்ள இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. 'பைரவா' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமைக்கான ஒப்பந்தம் மிகப்பெரிய தொகைக்கு கையெழுத்தாகியுள்ளது. விஜய்யின் முந்தைய படமான 'தெறி' மிகப்பெரிய ஹிட் ஆனதால் இந்த படமும் அதேபோல் வசூலில் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்து வரும் இந்த படத்தை 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.