சூர்யா இல்லாமலே நடந்த 'சூர்யா 40' பட பூஜை: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,February 15 2021]

சூர்யா நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யாவின் 40வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்க இருப்பதாகவும், சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தின் நாயகி பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் சத்யராஜ் நடிக்க உள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை உடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கும் என ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இதனை அடுத்து சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற புகைப்படங்களை பதிவு செய்தது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இதில் இயக்குனர் பாண்டியராஜன், இசையமைப்பாளர் டி.இமான், பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, தேவதர்ஷினி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் குணமான சூர்யா, தற்போது ஓய்வு எடுத்து வருவதால் அவர் இல்லாமலேயே ’சூர்யா 40’ படத்தின் பூஜை நடந்தாலும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

மாளவிகா மோகனன் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: த்ரில் டீசரும் வெளியீடு!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த மாளவிகா மோகனன் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு? வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

சுற்றுச் சூழல் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.

சூர்யா 40: 12 வருடங்களுக்கு பின் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் 'சூர்யா 40' படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும் இன்று முதல் படப்பிடிப்பு

ஓய்வுக்கு பின் 'தல' தோனி செய்யும் வேலையை பாருங்கள்!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பயிற்சியாளராகவும் மாறி வருகின்றனர் என்பது தெரிந்ததே.

மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது: கமல்ஹாசன்

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியா முழுவதும் உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் ரூ.90க்கு மேலும், வட மாநிலங்களில் ரூ.100ஐயும் தாண்டி