'சூர்யா 42' படத்திற்கு ரஜினி பட டைட்டிலா? சிறுத்தை சிவாவின் மாஸ் திட்டம்..!

  • IndiaGlitz, [Friday,April 14 2023]

சூர்யா நடித்து வரும் ’சூர்யா 42’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் வரலாற்று கதை அம்சம் கொண்ட காட்சிகளின் படப்பிடிப்பை கேரளா, இலங்கை ஆகிய பகுதிகளில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தில் சூர்யா இதுவரை இல்லாத அளவில் அதிக கெட்டப்புகளில் நடித்து வருவதாகவும் இந்த படம் சூர்யாவுக்கு திரையுலக வாழ்வில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி ’சூர்யா 42' படத்தின் டைட்டில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் அதற்காக ஒரு ப்ரோமோ வீடியோவை பட குழுவினர் தயார் செய்திருப்பதாகவும் அனிமேஷனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்திற்கு ’வீர்’, ‘அக்னீஸ்வரன்’ உள்ளிட்ட டைட்டில் பரிசீலனை செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ’கங்குவா’ என்ற டைட்டிலை படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஹிந்தி படம் தான் ’கங்குவா’ என்பதும் இந்த படம் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ’மலையூர் மம்பட்டியான்’ படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டைட்டில் 10 மொழிகளுக்கும் பொருந்தும் என்பதால் சிறுத்தை சிவா இந்த டைட்டிலை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

36 வருடங்களுக்கு முன் ரஜினிகாந்த் நடித்த ’கங்குவா’ திரைப்படத்தின் டைட்டில் தான் 'சூர்யா 42' படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளதா? என்பதை வரும் 16ஆம் தேதி வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு உட்பட பலர் அளித்துள்ளனர் என்பதும் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்யின் 'தெறி' ரிலீஸாகி 7 வருடங்கள்.. அட்லி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான 'தெறி' திரைப்படம் ரிலீஸ் ஆகி ஏழு வருடங்கள் ஆனதை அடுத்து இயக்குனர் அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

நீங்கள் எப்போதும் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த தவறியதில்லை:  'தல'யை சந்தித்த விக்ரம்..!

தல தோனியை சந்தித்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் விக்ரம் 'நீங்கள் எப்போதும் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த தவறியதில்லை' என்று பதிவு செய்துள்ளதை அடுத்த

உலகின் செல்வாக்கு மிக்க 100 பிரபலங்கள் பட்டியலில் 2 இந்திய திரையுலக பிரபலங்கள்..!

 அமெரிக்காவின் முன்னணி ஊடகமான டைம்ஸ் உலகின் பிரபலமான 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதில் இந்திய திரை உலகை சார்ந்த இரண்டு பேர் இடம் பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

பைக் ஊர்வலம் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த விஜய் ரசிகர்கள்: வைரல் வீடியோ..!

தளபதி விஜய்யின் ரசிகர்கள் பைக்கில் ஊர்வலமாக சென்று சட்ட மாமேதை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு உதவி செய்த அஜித்.. கணவரின் நெகிழ்ச்சி பதிவு..!

விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு நடிகர் அஜித் உதவி செய்தது குறித்து அந்த பெண்ணின் கணவர் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: