close
Choose your channels

விஜய்யின் 'தெறி' ரிலீஸாகி 7 வருடங்கள்.. அட்லி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

Friday, April 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான ‘தெறி’ திரைப்படம் ரிலீஸ் ஆகி ஏழு வருடங்கள் ஆனதை அடுத்து இயக்குனர் அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லி ’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனை அடுத்து அவர் இயக்கிய திரைப்படம் தான் ‘தெறி’. இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் ’மெர்சல்’ ’பிகில்’ என அடுத்தடுத்து விஜய் படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘தெறி’ திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் ரூ.150 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய்யுடன் இணைந்த முதல் திரைப்படம் ‘தெறி’ ரிலீஸ் ஆகிய ஏழு வருடங்கள் ஆனதை அடுத்து ‘தெறி’ படத்தின் சில காட்சிகளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள இயக்குனர் அட்லி, அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அட்லியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.