'சூர்யா 42' டைட்டில் இதுதான்.. உறுதி செய்யப்பட்ட தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,April 15 2023]

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் வீடியோ நாளை காலை 9.05 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர் என்பதை பார்த்தோம்.

அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு ரஜினி பட டைட்டில் வைக்கப்பட உள்ளதாகவும் கடந்த 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஹிந்தி திரைப்படம் ’கங்குவா’ என்ற டைட்டில் தான் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை வெளியாக இருக்கும் ’சூர்யா 42’ படத்தின் டைட்டில் வீடியோ குறித்த சென்சார் சர்டிபிகேட் இணையதளங்களில் கசிந்து உள்ளது. இதில் 1 நிமிடம் 16 வினாடிகளுக்கு இந்த வீடியோ இருப்பதாகவும் இந்த வீடியோவில் டைட்டில் ’கங்குவா’ என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ’சூர்யா 42’ படத்தின் டைட்டில் ’கங்குவா’ என்பதுதான் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 10 மொழிகளுக்கும் பொதுவான டைட்டிலாக இந்த டைட்டில் இருப்பதை எடுத்து சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு உட்பட பலர் அளித்துள்ளனர் என்பதும் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஜிபி முத்துவுக்கு என்ன ஆச்சு..? மருத்துவமனையில் திடீரென அனுமதி..!

டிக் டாக் மூலம் பிரபலமடைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் ஜிபி முத்து திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை

பெற்றோருக்கு ரஜினி வைத்த சிலையால் ஊர் மக்களின் பிரச்சனை தீர்ந்த ஆச்சரியம்: பொதுமக்கள் மகிழ்ச்சி..!

ரஜினிகாந்த் தனது பூர்வீக ஊரில் தனது பெற்றோருக்கு சிலை வைத்ததை அடுத்து அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களின் தண்ணீர் பிரச்சனை தீர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

பந்தை வைத்து வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் ஆண்ட்ரியா.. வைரல் வீடியோ..!

நடிகை ஆண்ட்ரியா கையிலும் காலிலும் பந்தை மாற்றி மாற்றி வைத்து வேற லெவலில் வொர்க்-அவுட்  செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

7 உலக அதிசயங்களில் ஒன்றில் விஜய் டிவி டிடி.. வைரல் வீடியோ..!

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோன் தொங்கும் தோட்டம் என்ற பகுதியில் இருந்து எடுத்த

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த 'காசே தான் கடவுளடா'.. இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா?

இயக்குநர் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவான 'காசேதான் கடவுளடா' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.