close
Choose your channels

'சூர்யா 42' டைட்டில் இதுதான்.. உறுதி செய்யப்பட்ட தகவல்..!

Saturday, April 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் வீடியோ நாளை காலை 9.05 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர் என்பதை பார்த்தோம்.

அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு ரஜினி பட டைட்டில் வைக்கப்பட உள்ளதாகவும் கடந்த 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஹிந்தி திரைப்படம் ’கங்குவா’ என்ற டைட்டில் தான் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை வெளியாக இருக்கும் ’சூர்யா 42’ படத்தின் டைட்டில் வீடியோ குறித்த சென்சார் சர்டிபிகேட் இணையதளங்களில் கசிந்து உள்ளது. இதில் 1 நிமிடம் 16 வினாடிகளுக்கு இந்த வீடியோ இருப்பதாகவும் இந்த வீடியோவில் டைட்டில் ’கங்குவா’ என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ’சூர்யா 42’ படத்தின் டைட்டில் ’கங்குவா’ என்பதுதான் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 10 மொழிகளுக்கும் பொதுவான டைட்டிலாக இந்த டைட்டில் இருப்பதை எடுத்து சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு உட்பட பலர் அளித்துள்ளனர் என்பதும் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.