நேரடி தெலுங்கு படத்தில் சூர்யா? இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்கள் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் திரைப்படங்களிலும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்கள் தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடித்து வருவார்கள் என்பதை பார்த்து வருகிறோம்

குறிப்பாக விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் அனைத்து திரைப்படங்களும் தெலுங்கு மாநிலங்களில் ஹிட்டாகி வரும் நிலையில் அவரும் தமிழ், தெலுங்கில் தயாராகும் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’வணங்கான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ மற்றும் 'ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனம் யூவி கிரியேஷன் தயாரிப்பில் பிரபல இயக்குனர் ’சூர்யம்’ சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும், தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More News

மணிரத்னம் நாயகியை காதலிக்கின்றாரா நடிகர் சித்தார்த்? வைரலாகும் வீடியோ

மணிரத்னம் இயக்கத்தில் உருவான படத்தில் நடித்த நடிகை ஒருவரை நடிகர் சித்தார்த் காதலித்து வருவதாகவும் இருவரும் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாகவும் சமூக வலை தளங்களில்

'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு பிரபல நடிகருடன் செம ஆட்டம் ஆடிய சமந்தா: வைரல் வீடியோ

பிரபல நடிகை சமந்தா 'ஓ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு பிரபல நடிகருடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது இணைந்து நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

உள்ளாடை சைஸ் கேட்ட நெட்டிசனுக்கு சாட்டையடி பதில் கொடுத்த பிரபல நடிகை!

தமிழ் திரையுலக மற்றும் தொலைக்காட்சி நடிகை ஒருவரிடம் நெட்டிசன் ஒருவர் உள்ளாடை சைஸ் கேட்டதற்கு அவர் சாட்டையடி பதில் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இப்படி ஒரு முதலிரவு சீன் எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டீங்கள் விஷ்ணு விஷால்

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தற்போது 'கட்டா குஸ்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும்

சினிமாவில் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டார் நடிகரின் பேத்திகள்!

நடிகர் நடிகைகள் தங்களது வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைப்பது தமிழ் திரை உலகம் உள்பட இந்திய திரையுலகிற்கு புதிதல்ல. சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், அமிதாபச்சன் உள்பட