close
Choose your channels

சூர்யாவின் 'சிங்கம்' படத்தில் நடித்த நடிகர் கைது!

Wednesday, September 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் ‘சிங்கம்’ படத்தில் போதை மருந்து கடத்தல் செய்பவராக நடித்த நடிகர் ஒருவர் உண்மையிலேயே போதை மருந்து கடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகிய ‘சிங்கம்’ திரைப்படத்தில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த வில்லன் நடிகர் டேனி என்பவரின் அடியாளாக நடித்திருப்பவர் நடிகர் காக்விம். நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இவர் பெங்களூரில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட காக்விம் இடமிருந்து எம்.டி.எம்.ஏ போதைப்பொருட்களும் 8 லட்சம் மதிப்புள்ள காரும் கைப்பற்றப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கம் படத்தில் போதை மருந்து கடத்தியதாக நடித்த நடிகர் ஒருவர் உண்மையாகவே போதை மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.