close
Choose your channels

முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் இசையமைப்பாளர்.. 'சூர்யா 44' படத்தின் மாஸ் தகவல்..!

Saturday, May 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிக்க இருக்கும் ‘சூர்யா 44’ திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் அந்த இசையமைப்பாளர் முதல் முறையாக சூர்யாவுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 44’ படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்ததே. சூர்யா தற்போது ’கங்குவா’ படத்தின் இறுதி கட்ட தொழில்நுட்ப பணியில் இருப்பதால் அதை முடித்துவிட்டு அவர் ‘சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி மற்றும் முக்கிய நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணனின் சமூக வலைதள பக்கத்தில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ’எப்போதும் போல உங்கள் சம்பவங்களை பண்ணுங்கள் அண்ணா, ஒரு டான்ஸ் மெட்டீரியல் பாடலும் வையுங்க’ என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்க இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சூர்யாவின் படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி இசையமைப்பாளர்கள் இசையமைத்த நிலையில் முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இணைகிறார் என்பதும் கார்த்திக் சுப்புராஜ், சூர்யா, சந்தோஷ் நாராயணன் ஆகியோர்களின் இந்த கூட்டணி கலக்கலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment